வினேஷ் போகத் தகுதி நீக்கம் - இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நீதிகேட்டு போராட்டம்.! - Seithipunal
Seithipunal


ஒலிம்பிக் மல்யுத்தம் போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவில் விளையாடி வந்த இந்திய வீராங்கனை நேற்றிரவு அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், 100 கிராம் உடல் எடை அதிகரித்துள்ளதால் இறுதிப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்தத் தகுதி நீக்கம் அவருக்கு மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த நபர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதற்கிடையே வினேஷ் போகத்துக்கு இந்திய சார்பில் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்திற்கு நீதி கேட்டு இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பாராளுமன்றத்தின் மகார் த்வாரில் நின்றபடி குரல் எழுப்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நேரத்தில் பாராளுமன்ற கூட்டமும் நடைபெற்று வரும் நிலையில், இந்த விவகாரம் பாராளுமன்றத்திற்குள்ளும் எதிரொலித்தது. வினேஷ் போகத் காலிறுதியில் 82 முறை தோல்வியடையாத வீராங்கனையை வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india team mp strike for Vinesh Phogat Disqualify


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->