மீண்டும் மனித உரிமைகள் கவுன்சிலில் இந்தியா..7-வது முறையாக தேர்வு!  - Seithipunal
Seithipunal


ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் 7-வது முறையாக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்காகவும் மற்றும் பாதுகாப்பதற்காகவும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் தொடங்கப்பட்டது ஆகும் .இந்த அமைப்பு பாதுகாப்பதற்காக உலக நாடுகளை உன்னிப்பாக கவனித்து தனது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .குறிப்பாக நாடுகளுக்கிடையே நடைபெறும் போரில் ஏற்படும் மனித உயிரிழப்புகளில் நடைபெறும் மனித உரிமைகளை மீறும் நாடுகள் மீது நடவடிகளைகளை எடுக்கும்.அந்தவகையில்  இந்நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் உறுப்பு நாடுகளுக்கான தேர்தல் நேற்று நடந்தது. இதில், இந்தியா, பாகிஸ்தான் என 14 நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

இதுபற்றி ஐ.நா.வுக்கான நிரந்தர இந்திய பிரதிநிதியான தூதர் ஹரீஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், 2026-28 ஆண்டுகளுக்கான ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலுக்கு 7-வது முறையாக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்துள்ளது.

ஆதரவளித்த அனைத்து நாடுகளுக்கும் நன்றிகள். மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரம் ஆகியவற்றுக்கான இந்தியாவின் ஈடுஇணையற்ற ஈடுபாட்டை இது பிரதிபலிக்கிறது. எங்களுடைய பதவி காலத்தில் இந்த நோக்கத்திற்காக செயலாற்ற நாங்கள் ஆவலாக காத்திருக்கிறோம் என பதிவிட்டு உள்ளார்.

இதன்படி, 2026 முதல் 2028 வரையிலான 3 ஆண்டு காலகட்டத்திற்கு மீண்டும் இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டு கவுன்சிலில் சேவையாற்றும். பருவகால மாற்றம், சுகாதாரம் மற்றும் வறுமை ஒழிப்பு விவகாரங்கள் உள்ளிட்ட விசயங்களை கவுன்சிலில் சேர்த்துள்ளதுடன், மனித உரிமைகளுக்காக விரிவான அணுகுமுறைகளை ஐ.நா. கவுன்சிலில் இந்தியா சமர்ப்பித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India elected to the Human Rights Council again for the 7th time


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->