தமிழக மீனவர்கள் தாக்குதல் விவகாரம்: இந்தியா, இலங்கை பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: பவன் கல்யாண் வலியுறுத்தல்..!
India and Sri Lanka should hold talks on the issue of attacks on Tamil Nadu fishermen Andhra Pradesh Deputy Chief Minister Pawan Kalyan
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக இந்தியா, இலங்கை பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியுள்ளதாவது;
வங்கக் கடலில் 05 வெவ்வேறு நிகழ்வுகளில் தமிழகத்தைச் சேர்ந்த 24 மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் ஆழ்ந்த கவலைக்குரியவை என்று தெரிவித்துள்ளார். அத்துடன், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த இந்த மீனவர்கள் துன்பங்களையும் காயங்களையும் சந்தித்துள்ளனர் என்பதை அறிந்து வருத்தமடைகிறேன் என்று கவலை வெளியிட்டுள்ளார்.

மேலும், இது அவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதித்துள்ளதாகவும், இந்தியாவும் இலங்கையும் பகிர்ந்து கொள்ளும் நீண்டகால நல்லுறவு மற்றும் அன்பான உறவின் வெளிச்சத்தில், மீண்டும் மீண்டும் இந்த சம்பவங்கள் நிகழ்கின்றன என்று சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், இதுபோன்ற சூழ்நிலைகளில் இணக்கமான முறையில் செயல்பட்டு வெளியுறவு அமைச்சகம் தீர்வு காணவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்கள் பரஸ்பர ஒத்துழைப்புடன் இவற்றை தீர்க்க ஆக்கபூர்வமான மற்றும் நீடித்த உரையாடலில் ஈடுபடுவது கட்டாயமாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், இரு தரப்பு மீனவர்களின் பாதுகாப்பையும் கண்ணியத்தையும் நிலைநிறுத்தவும், பரஸ்பர புரிதல் மற்றும் நல்லெண்ணத்தின் மூலம் முயற்சிகள் எடுக்க வேண்டும் என்றும் தான் வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றும் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
English Summary
India and Sri Lanka should hold talks on the issue of attacks on Tamil Nadu fishermen Andhra Pradesh Deputy Chief Minister Pawan Kalyan