இந்தியாவில் அதிகரித்து வரும் ஒமைக்ரான் பாதிப்பு... ஓரே நாளில் 1700 பேர் தொற்று பாதிப்பு...! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் ஓமைக்ரான் பாதிப்பு  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடந்த 2020ம் ஆண்டு உலகமெங்கும்  பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு பல பாதிப்புகளை ஏற்படுத்தியது. ஊரடங்கு தடுப்பூசி என கொரோனாவை கட்டுபடுத்த பல நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.

கடந்த ஜனவரி முதல் இந்தியாவில் 18 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தென்னாப்பிரிக்க நாட்டில் உருமாற்றமடந்த ஓமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவில் ஓமைக்ரான் பரவல் அதிகரித்து காணப்படுகிறது. நேற்று 1,525 ஒமைக்ரான் பாதிப்பு இன்று 1700 ஆக உள்ளது. ஒரே நாளில் தொற்று அதிகரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முககவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Increasing Omegron Impact in India ...


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->