பாமாயில் இறக்குமதி அதிகரிப்பு.. சமையல் எண்ணெய் குறைய வாய்ப்பு.. மத்திய அரசு.! - Seithipunal
Seithipunal


இந்தோனேசியாவில் தற்காலிக தடைக்குப் பிறகு பாமாயில் இறக்குமதி விரைவில் தொடங்கும் என்பதால் நாட்டில் சமையல் எண்ணெய் விலை குறையும் என மத்திய உணவு மற்றும் பொது வினியோகத் துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்தில் குறைந்தபட்சத் தேவையான 75 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையை விட 80 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையை கையில் இருக்கும்.

அதேபோல் கடந்த ஆண்டு சுமார் 60 லட்சம் மெட்ரிக் டன் அரிசி கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டும் அதே அளவு எதிர்பார்க்கப்படுகிறது.

40 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையை ஏற்றுமதிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் சுமார் 11 லட்சம் மெட்ரிக் டன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

எகிப்தை தொடர்ந்து துருக்கியும் இந்திய கோதுமை இறக்குமதிக்கு அனுமதி வழங்கியுள்ளது. நாட்டில் சமையல் எண்ணெய் கையிருப்பு போதுமானதாக உள்ளது.

மேலும் இந்தோனேஷியாவின் தற்காலிக தடைக்குப் பிறகு பாமாயில் இறக்குமதி விரைவில் தொடங்கும் எனவும் இதன் மூலம் நாட்டில் சமையல் எண்ணெய் விலை குறையும் என்றும் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர் சுதன்ஷு பாண்டே தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Increase in imports of palm oil Less likely to decrease cooking oil


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->