குழந்தைகளை கால்வாயில் வீசி துடிதுடிக்க தற்கொலை செய்து கொண்ட தாய்.. பெரும் அதிர்ச்சி சோகம்.!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள மாண்டியா தாலுகாவில் இருக்கும் குலெனகள்ளி கிராமத்தை சார்ந்தவர் ஜோதி (வயது 33). இவருக்கு திருமணம் முடிந்து நிசர்கா என்ற 7 வயதுடைய மகளும், பவன் என்ற 4 வயதுடைய மகனும் இருக்கிறார். இந்நிலையில், ஜோதி கோவிலுக்கு சென்று வருவதாக தனது குடும்பத்தாரிடம் கூறிவிட்டு கிளம்பியுள்ளார். 

இந்த நேரத்தில், தனது மகள் மற்றும் மகனையும் உடன் அழைத்து சென்ற நிலையில், ஜோதி அங்கிருக்கும் கிராமத்தின் கால்வாய் ஓரத்தில் நடந்து சென்று கொண்டு இருந்துள்ளார். இந்நேரத்தில், தனது மகள் மற்றும் மகனை கால்வாயில் வீசி பின்னர் தானும் குதித்து தற்கொலை செய்துள்ளார். இந்த சமயத்தில், கால்வாயில் பாசனத்திற்க்காக தண்ணீரும் சென்று கொண்டு இருந்ததால் மூவரும் உயிருக்கு தத்தளித்துள்ளனர். 

மேலும், மூவரும் நீரில் அடித்துச்செல்லபட்ட நிலையில், இது தொடர்பாக காவல் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். பின்னர் இது தொடர்பான தகவலை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைவதற்குள், அப்பகுதி மக்கள் காப்பாற்ற முயற்சித்த நேரத்திலும் பலனில்லாமல் போயுள்ளது. 

மூவரும் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், நீண்ட தேடுதலுக்கு பின்னர் ஜோதியின் உடலை காவல் துறையினர் மீட்டுள்ளனர். குழந்தைகள் இருவரின் உடல்கள் மீட்கப்படாத நிலையில், ஜோதியின் உடலை மட்டும் காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Mumbai mother killed child


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal