போதையில் தகராறு செய்து சாப்பாடு கேட்ட கணவன்.. கண்டுகொள்ளாத மனைவி.. துடிதுடிக்க அரங்கேறிய கொடூர கொலை.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் சீதேகெம்பனஹள்ளி கிராமத்தை சார்ந்தவர் நாராயணப்பா (வயது 49). இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் பைரம்மா (வயது 45). இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், நாராயணப்பாவிற்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. 

இதனால் தினமும் மது அருந்திவிட்டு பணிக்கு செல்வதும், பணி முடிந்தவுடன் மது அருந்திவிட்டு போதையில் வீட்டிற்கு வருவதும், தகராறு செய்வதும் தொடர்ந்து இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினத்தின் போது வழக்கம் போல நாராயணப்பா மது போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் மனைவியிடம் சாப்பாட்டை எடுத்து வைக்க கூறி கூறியுள்ளார். 

மதுபோதையில் வந்து தகராறும் செய்துவிட்டு, சாப்பிடும் கேட்டதால் ஆத்திரத்தில் இருந்த மனைவி கெங்க பைரமா மறுப்பு தெரிவித்து அமைதி காத்துள்ளார். இரண்டு முறை கூறிப்பார்த்த நாராயணப்பா, ஆத்திரமடைந்து மனைவியை அடித்து உதைத்துள்ளார். மேலும், ஆத்திரம் தீராது வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து மனைவியை சரமாரியாக குத்தியுள்ளார்.

இதனால் படுகாயமடைந்த பைரமா சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

காவல் துறையிரின் வருகை அறிந்த நாராயணப்பா தப்பி செல்லவே, இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு நாராயணப்பவை தேடி வந்தனர். இந்நிலையில், போதை தெளிந்ததும் தவறை உணர்ந்துகொண்ட நாராயணப்பா அங்குள்ள ராஜனகுண்டே காவல் நிலையத்தில் விஷயத்தை தெரிவித்து சரணடைந்துள்ளார். இவரை கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Karnataka wife murder by drunken husband police arrest


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->