பங்குசந்தையில் முதலீடு செய்து கடனாளி ஆனேன்.. இதுவே என் இறுதி முடிவு..! கம்ப்யூட்டர் என்ஜினியர் தற்கொலையில் பகீர் கடிதம்..!!  - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தை சார்ந்தவர் பிரசாந்த் குமார் (வயது 40). இவர் கணினி பொறியாளர் ஆவார். பிரசாந்த் குமார் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில்., இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். இவரது மனைவியும் கணினி பொறியாளராக பணியாற்றி வரும் நிலையில்., பெங்களூரில் மற்றொரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். 

இவர்கள் இருவரும் பெங்களூரில் இருக்கும் பகுதியில் தனியாக வீடெடுத்து வாடகைக்கு வசித்து வரும் நிலையில்., நேற்று முன்தினந்தன்று நள்ளிரவு நேரத்தில் பிரசாந்த் வீட்டில் இருந்து புறப்பட்டு வெளியே சென்றுள்ளார். இதற்கு பின்னர் பிரசாந்த் வீடு திரும்பாததால்., அதிர்ச்சியடைந்த மனைவி பல இடங்களில் தேடியும் பிரசாந்த் கிடைக்கவில்லை. 

died, killed, murder, suicide attempt, கொலை, தற்கொலை, குற்றம்,

மேலும்., பிரசாந்த் குறித்து அவரது நண்பர்கள்., நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் என அனைவரிடமும் விசாரித்தும் எந்த விதமான முன்னேற்றமும் கிடைக்கவில்லை. இதனையடுத்து நேற்று அதிகைலையில்., பெங்களூர் கோலார் ரோடு பகுதியில் இருக்கும் மேம்பாலத்தில் இரத்த வெள்ளத்தில் வாலிபர் பிணமாக கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்., இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில்., இரத்த வெள்ளத்தில் மிதந்த வாலிபர் பிரசாந்த் குமார் என்பதும்., இவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்ததும் தெரியவந்தது. 

pangu sandhai, பங்கு சந்தை, sensex,

இந்த சமயத்தில்., பிரசாத்தின் சட்டைப்பையில் கடிதம் ஒன்றும் இருந்துள்ளது. அந்த கடிதத்தில்., பிரசாந்த் குமரியாக எனக்கு சொந்த ஊரில் பல ஏக்கர் அளவில் சொந்த நிலங்கள் உள்ளது. இந்த நிலங்களை விற்பனை செய்து கிடைத்த பணத்தை., பங்குசந்தையில் முதலீடு செய்திருந்தேன். பங்கு சந்தையில் எனக்கு அதிகளவில் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் வாங்கும் சூழ்நிலைக்கு வந்தேன். 

வாங்கிய கடனை மீண்டும் கொடுக்க இயலவில்லை என்பதால்., பங்கு சந்தையில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டி., என்னால் எழுந்து வர இயலவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து., தற்கொலை முடிவு எடுத்து தற்கொலை செய்து கொள்கிறேன்.. எனது இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து காவல் துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in karnadaga computer engineer attempt suicide due to sensex loss investment


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->