மாற்றுத்திறனாளி கணவனின் கண் முன்னதாகவே மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய கொடூரன்கள்..!! - Seithipunal
Seithipunal


பெண்களுக்கு எதிரான தொடர் அநீதிகள் தொடர்ந்து நடைபெற்று பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் நிலையில்., கணவன் கண் முன்னரே பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அசாம் மாநிலத்தில் உள்ள திப்ருகார் மாவட்டத்தில் இருக்கும் போகப்பரா பகுதியை சார்ந்த பெண்ணொருவர் வசித்து வந்தார். இவரின் கணவர் மாற்றுத்திறனாளி ஆவார்.. இந்த பெண்ணை காம கொடூரன்கள் கூட்டாக சேர்ந்து கணவரின் கண் முன்னரே பாலியல் பலாத்காரம் செய்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த விஷயம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரை ஏற்ற காவல் துறையினர்., இது குறித்து வழக்குப்பதிவு செய்து மூவரை கைது செய்தனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் செய்தியார்களிடம் தெரிவித்தாவது., 

fear, sexual harassment, sexual abuse, பாலியல் வன்கொடுமை, பாலியல் பலாத்காரம், பயம்,

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள திர்ஷ் சர்மா., விவேக் குன்வர் மற்றும் பாஸ்கர் ஆகியோரின் அடையாளம் காணப்பட்டு., கடந்த சனிக்கிழமையன்று இந்த காம கொடூரன்களால் இந்த துயரம் அரங்கேறியுள்ளது. 

சம்பவத்தன்று பாதிக்கப்பட்ட பெண்ணின் கதவை தட்டி தாகமாக இருப்பது போல நடித்து தண்ணீர் கேட்ட நிலையில்., பெண் தண்ணீர் கொண்டு வர உள்ளே சென்ற சமயத்தில் மூவரும் உள்ளே நுழைந்து., கணவரின் கண் முன்னே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என்று தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணையில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Assam girl rapped police investigation going on


கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்குAdvertisement

கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்கு
Seithipunal