ஈரான் போரின் தாக்கம் எதிரொலி…! பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுக்க கலால் வரியை குறைத்த மத்திய அரசு....! - Seithipunal
Seithipunal


சர்வதேச எண்ணெய் சந்தையில் ஏற்பட்ட அதிரடி மாற்றங்களுக்கிடையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு முக்கிய தீர்மானத்தை எடுத்துள்ளது.

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி திடீரென குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த மாற்றத்தின் மூலம், லிட்டருக்கு ரூ.13 ஆக இருந்த பெட்ரோல் கலால் வரி, ரூ.10 குறைக்கப்பட்டு தற்போது ரூ.3 ஆக குறைந்துள்ளது.

மேலும், டீசல் மீது விதிக்கப்பட்டிருந்த கலால் வரி முழுமையாக நீக்கப்பட்டு, பூஜ்ஜியமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.ஈரான் போரின் தாக்கத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வேகமாக உயர்ந்து, விநியோகத்திலும் தடைகள் உருவாகியுள்ள சூழலில், இந்த வரி குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும்,விலை ஏற்றத்தை கட்டுப்படுத்துவதோடு, எண்ணெய் நிறுவனங்களின் பொருளாதார சுமையையும் குறைக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நடவடிக்கை, பொதுமக்கள் மீது நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்தும் எரிபொருள் விலை உயர்வைத் தடுக்கும் முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

impact Iran war reverberating central government drastic action reduce excise duty prevent rise petrol and diesel prices


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->