உத்திரபிரதேசம்: செல்பி மோகம்.. பரிதாபமாய் பலியான ஐஐடி மாணவி..!
IITK student drowns in river while taking Selfie
செல்பி எடுக்க முயன்ற மாணவி கால்தவறி ஆற்றில் விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலம் , கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் படித்து வருபவர் செஜல் ஜெயின். புவி அறிவியல் துறையின் இரண்டாம் ஆண்டு மாணவியான இவர் தனது நண்பர்களுடன் கங்கை ஆற்றுக்கு சென்றுள்ளார்.
அப்போது செல்பி எடுக்க முயன்ற போது அவர் கால்தவறி விழுந்துள்ளார். இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த காவல்துறையினர் செஜல் ஜெயினை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்ப் வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த பெண் நண்பர்களுடன் சென்ற போது தனியா செல்பி எடுக்க எண்ணி தடுப்பு கேட்டை தாண்டி செல்பி எடுக்க சென்ற போது தவறி விழுந்ததாக தெரிகிறது. செல்பி எடுக்கும் போது பொதுமக்கள் கவனமாக இருக்க வ்ணெடும் என காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர்.
English Summary
IITK student drowns in river while taking Selfie