அரசுக்கு சொந்தமான நிலத்தை வக்ப் நிலமாக அறிவிக்கப்பட்டிருந்தால், அதை அரசு கைப்பற்ற முடியும்; நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்..!
If government owned land has been declared as Waqf land the government can seize it Central government argues in court
வக்ப் போர்டு சொத்து தொடர்பாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்தத்திற்கு எதிராக, காங்கிரஸ், சமாஜ்வாதி, தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், ஏராளமான முஸ்லிம் அமைப்புகள் என, 100-க்கும் அதிகமான மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்கள் மீதான விசாரணை முதல் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.மனுதாரர்கள் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்ட நிலையில், மத்திய அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

விசாரணையின் போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது; அரசு நிலத்தை உரிமை கோர யாருக்கும் உரிமை கிடையாது. அரசுக்கு சொந்தமாக இருந்த நிலத்தை வக்ப் நிலமாக அறிவிக்கப்பட்டிருந்தால், அந்த நிலத்தை அரசு கைப்பற்ற முடியும் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பே உள்ளது என்றும், வக்ப் என்பது தர்மம் தானே தவிர, இஸ்லாத்தின் ஒரு இன்றியமையாத பகுதியில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்து, கிறிஸ்துவம், சீக்கியம் என அனைத்து மதங்களிலும் தர்மம் என்ற ஒரு பகுதி உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், அரசு கொண்டு வந்த இந்த வக்ப் சட்டத் திருத்தம் குறித்து அனைத்து தரப்பு மக்களிடமும் கருத்து கேட்கப்பட்டுள்ளது என்றும், கூட்டு பாராளுமன்ற குழு 36 அமர்வுகளில் இது குறித்து விவாதித்துள்ளன, எனவும் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
If government owned land has been declared as Waqf land the government can seize it Central government argues in court