ஜனாதிபதி முர்முவுடன் உள்துறை மற்றும் வெளியுறவு அமைச்சர் சந்திப்பு..!
Home and External Affairs Ministers meet President Murmu
ஜனாதிபதி திரவுபதி முர்மு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அங்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து இறந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பிந்தைய சூழ்நிலை குறித்து அம்மாநில ஆளுநர், முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்திய பின்னர் டில்லி திரும்பினார்.
இந்நிலையில் ஜனாதிபதி மாளிகை சென்ற உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் ஜனாதிபதி திரவபதிமுர்முவை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது, காஷ்மீரில் நடந்த தாக்குதல் மற்றும் அங்குள்ள நிலைமை குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
English Summary
Home and External Affairs Ministers meet President Murmu