பாகிஸ்தான் பெண் இந்தியாவை விட்டு வெளியேற 72 மணி நேர கெடு.!! இந்து அமைப்பு எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானை சேர்ந்த சீமாவின் கணவர் குலாம் ஹைதர் வளைகுடா நாளான சவுதி அரேபியாவில் வேலை செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு நான்கு குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு பப்ஜி ஆன்லைன் விளையாட்டு மூலம் இந்தியாவைச் சேர்ந்த சச்சின் என்பவர் உடன் சீமாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதால் தன் கணவன் வாங்கிய வீட்டை விற்று விட்டு நான்கு குழந்தைகளுடன் சீமா வங்கதேசம் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ளார். டெல்லியில் உள்ள கிரேட் நொய்டாவில் காதலன் சச்சின் உடன் ஒரு மாதத்திற்கு மேலாக சீமான் தங்கி இருந்துள்ளார்.

இந்த விவகாரம் போலீசாருக்கு தெரிய வரவே பாகிஸ்தான் பெண்ணான சீமா மற்றும் காதலன் சச்சின், அவருடைய தந்தை ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற சீமா தற்பொழுது சச்சின் வீட்டில் வசித்து வரும் நிலையில் அவர் பாகிஸ்தான் திரும்ப அவரது உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் பாகிஸ்தான் பெண்ணான சீமா இந்தியாவை விட்டு 72 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என நொய்டாவை சேர்ந்த கௌரக்ஷா இந்து தளம் என்ற அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது இது குறித்து பேசிய அந்த அமைப்பின் தலைவர் வேத் நாகர் "துரோக தேசத்தை சேர்ந்த பெண் இங்கு தங்கி இருப்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். சீமா ஐதர் 72 மணி நேரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேறவில்லை என்றால் பெரும் போராட்டம் நடத்துவோம்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Hindu organization warns Pakistani woman has 72hours to leave India


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->