இனி பொண்ணுங்ககிட்ட வச்சுக்க மாட்டான்..! - ரயிலில் வால்தனம் செய்த இளைஞர்...செம மேக்கப் போட்டு இளம்பெண் கொடுத்த அல்டிமேட் தண்டனை..! - வீடியோ வைரல்
He wont be girls anymore young man who committed adultery train ultimate punishment given by young woman wearing heavy makeup Video goes viral
மராட்டிய மாநிலத்தில் ஓடிக்கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெண் பயணியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட இளைஞருக்கு, பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த நூதனமான எதிர்வினை சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பத்னேரா–அகோலா இடையே இயக்கப்பட்டு வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்த இளைஞர் ஒருவர், சக பெண் பயணியிடம் பாலியல் ரீதியாக அநாகரிகமாக நடந்து கொண்டு தொல்லை அளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற பயணிகள், உடனடியாக அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து கடுமையாக கண்டித்ததுடன், அவருக்கு தர்ம அடி கொடுத்தனர்.இதன் பின்னர், தனக்கு நேர்ந்த அவமதிப்புக்கு மறக்க முடியாத பாடம் புகட்ட வேண்டும் என்று முடிவு செய்த இளம்பெண், தன்னிடம் இருந்த ஒப்பனைப் பொருட்களை எடுத்து அந்த இளைஞரின் முகத்தில் பூசினார்.
அவரது உதடுகளில் லிப்ஸ்டிக் பூசியதுடன், கைகளில் வளையல்களையும் அணிவித்தார். இந்த சம்பவம் ரெயிலில் இருந்த பயணிகளின் கவனத்தை முழுமையாக ஈர்த்தது.இளம்பெண் இளைஞருக்கு வழங்கிய இந்த வித்தியாசமான தண்டனையை அங்கிருந்த சிலர் காணொளியாக பதிவு செய்தனர்.
பின்னர் அந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி, பல லட்சம் பேரின் கவனத்தை ஈர்த்து விவாதப் பொருளாக மாறின.இந்த காணொளியை பார்த்த பலர், பெண்களிடம் அத்துமீறுபவர்களுக்கு இப்படிப்பட்ட பொதுமக்கள் முன்னிலையிலான கண்டனம் அவசியம் என்று கருத்து தெரிவித்தனர்.
பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சமூகமும் தைரியமாக குரல் கொடுக்க வேண்டும் என்றும் பலர் ஆதரவு பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.அதேநேரத்தில், சிலர் வேறுபட்ட கருத்தையும் முன்வைத்துள்ளனர்.
குற்றச்சாட்டுக்கு உள்ளான நபரை பொதுமக்கள் தண்டிப்பதோ அல்லது அவமானப்படுத்துவதோ சரியான நடைமுறை அல்ல என்றும், சட்டத்தின் வழியே உரிய விசாரணை நடத்தப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதற்கேற்ற தண்டனையை நீதிமன்றம் வழங்குவதே நியாயமான அணுகுமுறை என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு, பெண்களின் பாதுகாப்பு, பொதுமக்களின் தலையீடு மற்றும் சட்ட நடைமுறைகள் குறித்து பல்வேறு தரப்பினரிடையே தீவிர விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
He wont be girls anymore young man who committed adultery train ultimate punishment given by young woman wearing heavy makeup Video goes viral