1,000 ஆண் குழந்தை பிறந்தால்.. வெறும் 700 பெண் குழந்தைகள் தான் பிறக்கிறது... பாலின விகிதாச்சாரம் குறித்த ஒரு செய்தி!
hariyana village Boy Girl birth range
ஹரியாணா மாநிலத்தில் பாலின விகிதம் தொடர்பான புதிய ஆய்வுகள் முடிவு ஒன்று கவனம் ஈர்த்துள்ளது.
அதன்படி, அம்மாநிலத்தின் பல கிராமங்களில் 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 700க்கும் குறைவான பெண் குழந்தைகளே பிறப்பதாக தெரியவந்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளின் பிறப்புச் சரிவுகள் ஆராய்ந்ததில், 481 கிராமங்களில் பாலின விகிதத்திலான சீர்கேடு கவலைக்கிடமாக அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இக்கிராமங்களில், பெண்கள் குறைவாக பிறப்பதற்கான முக்கியக் காரணமாக சட்டவிரோதமான கருக்கலைப்புகள் காட்டப்பட்டுள்ளன. மாநில எல்லையோரப் பகுதிகளான ஆம்பாலா (54 கிராமங்கள்), யமுனாநகர் (53 கிராமங்கள்), பஞ்ச்குலா (38 கிராமங்கள்), பிவானி (46 கிராமங்கள்), மஹேந்தர்கர் (42 கிராமங்கள்) உள்ளிட்ட மாவட்டங்களில் இது கூடியளவில் காணப்படுகிறது.
இந்த கிராமங்கள் பஞ்சாப், ராஜஸ்தான், ஹிமாசலப் பிரதேசம் ஆகிய அண்டை மாநில எல்லைகளுக்கு அருகே அமைந்திருப்பதால், அங்குள்ள மக்களுக்கு வெளியே சென்று சட்டவிரோத கருக்கலைப்புக்கு இடமளிக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.
பாலினம் முன்கூட்டியே தெரிந்துவிடும் வகையில் ஸ்கேன் செய்யும் நடைமுறைகள் சத்தமில்லாமல் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இதனை சரிசெய்ய அரசு அதிகாரிகள் கடும் நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
English Summary
hariyana village Boy Girl birth range