நடுவானில் பறந்த இண்டிகோ விமானத்தில் எரிபொருள் கசிவு; வாரணாசியில் தரையிறக்கம்..!
IndiGo flight lands in Varanasi due to fuel leak in mid air
மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில் இருந்து ஸ்ரீநகர் சென்ற இண்டிகோ விமானத்தில் எரிபொருள் கசிவு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் குறித்த விமானம் வாரணாசியில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
கோல்கட்டாவில் இருந்து காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு 166 பேருடன் இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்த போது, எரிபொருள் கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து விமானம் அவசரமாக வாரணாசியின் லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
உடனடியாக பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளதோடு, தொடர்ந்து நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து விமான நிலையத்தில் வழக்கமான பணிகள் நடந்தன. இது குறித்து விசாரணை தற்போது நடந்து வருகிறது.
English Summary
IndiGo flight lands in Varanasi due to fuel leak in mid air