நட்புக்காக கட்டாயப்படுத்தினாலும் அது லவ் ஜிஹாத் தான் - இளைஞருக்கு சிறைத்தண்டனை வழங்கிய ஹரியானா நீதிமன்றம்!
hariyana court order love jihad
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில், 14 வயது சிறுமியை வற்புறுத்திய குற்றச்சாட்டில் ஷாபாஜ் என்ற இளைஞருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில், பள்ளிக்கு செல்வதற்குள் முஸ்லிம் இளைஞர் ஒருவர் தொடர்ந்து தன்னை பின்தொடர்கிறார் என்றும், அவருடன் நட்பாக பழக வற்புறுத்துகிறார் என்றும் கூறி அந்த சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், ஷாபாஜ் மீது குற்றச்சதி, போக்சோ சட்டம் மற்றும் பிற சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணையை அடுத்து, இந்த வழக்கை விசாரித்த யமுனாநகர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தீர்ப்பில், சிறுமியை வற்புறுத்தும் இந்த செயல் ‘லவ் ஜிகாத்’ போன்று பரபரப்பான நிலையை உருவாக்கக்கூடியது என்றும், இது சமூக ஒற்றுமைக்கு ஆபத்தாக அமைகிறது என்றும் நீதிமன்றம் கூறியது.
இதனை கருத்தில் கொண்டு, ஷாபாஜ் மீது 7 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
English Summary
hariyana court order love jihad