காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட விலங்குகள்.. கண்கலங்க வைக்கும் காணொளி.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் பருவமழைக்காலமானது துவங்கவுள்ளது. இதன் முன்னெச்சரிக்கையாக ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பீகார், அசாம், டெல்லி, மும்பை போன்ற பல்வேறு மாநிலங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. 

இதனால் எங்கும் பெருவெள்ளம், மழை என்று தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகிறது. பலத்த காற்று, இடி மற்றும் மின்னலுடன் கனமழை கொட்டித்தீர்த்த நிலையில், வெப்பம் மளமளவென குறைந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது. இதனால் மக்கள் பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளானாலும், வீதிகள் மற்றும் ஆறுகளில் கனமழை காரணமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது. 

அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தில் கூட பல கிராமங்களுக்கு செல்லும் பாதைகள் துண்டிக்கப்பட்டது. வடமாநிலங்களில் பருவ மழையானது தனது கோர தாண்டவத்தை வெளிப்படுத்த துவங்கும் முன்னர் பெய்யும் மழைக்கே பல நகரங்கள் மற்றும் கிராம புரங்கள் தத்தளித்து வருகிறது. 

இந்த நிலையில், குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் படதாரி பகுதியில் உள்ள விலங்குகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் பதைபதைப்பு வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. மேலும், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட விலங்குகளின் நிலை குறித்த தகவல் இல்லை.. பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் மீட்பு படையினர் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gujarat rain Animals struggle in flood


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவுAdvertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவு
Seithipunal