ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி பரிதாப பலி: மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட 3 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். 

குஜராத், தேவபூமி துவாரகை மாவட்டத்தில் உள்ள ரான் கிராமத்தைச் சேர்ந்த மூன்று வயது சிறுமி நேற்று பிற்பகல் 1 மணி அளவில் விளையாடிக் கொண்டிருந்த போது தவறி ஆழ்துளைக்கிணற்றில் விழுந்துவிட்டது. 

குழந்தையை சுமார் 9 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு படையினர் மீட்டு முதற்கட்ட சிகிச்சைகள் வழங்கி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணத்தினால் சிறுமிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சிறுமியின் வீட்டிற்கு அருகே நீண்ட காலத்திற்கு முன்பு ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டதாகவும் பின்னர் அது கைவிடப்பட்டு திறந்து விடப்பட்டதாகவும் அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gujarat girl rescued borehole died 


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->