கடன் கொடுக்க மறுத்த நண்பனை கொடூர கொலை செய்த நட்பூக்கள்.. அரங்கேறிய பயங்கரம்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள உம்பர்காவ் பகுதியை சார்ந்தவர் நிலேஷ் ராவல் (வயது 29). இவர் மொத்த எண்ணெய் வியாபாரியாக பணியாற்றி வருகிறார். அங்குள்ள பாலகர் மாவட்டத்தின் தளசேரி பகுதியில் இருக்கும் கடைக்கு எண்ணெய் விநியோகம் செய்து வந்துள்ளார். 

மேலும், பணத்தை வசூல் செய்ய வாரம் ஒருமுறை தளசேரிக்கு சென்று வரும் நிலையில், கடந்த 4 ஆம் தேதி நிலேஷ் ராவல் வழக்கம்போல வெளியே சென்றவர் வீட்டிற்கு வரவில்லை. இந்த விஷயம் தொடர்பாக தளசேரி காவல் நிலையத்தில் நிலேஷின் தந்தை புகார் அளித்துள்ளார். 

இந்த புகார் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த நிலையில், அங்குள்ள குர்ஜே அணைக்கட்டு பகுதியில் கடந்த 8 ஆம் தேதியன்று பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை செய்த நிலையில், சம்பவத்தன்று நிலேஷிடம் அவரது நண்பர் கடன் கேட்டுள்ளார். அதற்கு நிலேஷ் மறுப்பு தெரிவித்த காரணத்தால், நண்பர்களாக சேர்ந்து கொலையை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக நிலேஷின் நண்பர்கள் 3 பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gujarat Friend Murder By Friends due to Loan Problem


கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!Advertisement

கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!
Seithipunal