எனக்கு தமிழ் பேச தெரியாததால் தேர்தல் பிரசாரத்துக்கு வர முடியாது - குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் .!
Gujarat Chief Minister Bhupendra Patel press meet to tamilnadu journalists
தமிழகத்தில் இருந்து குஜராத் மாநிலத்திற்கு பத்திரிகை நிருபர்கள் சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு குஜராத் மாநிலத்தின் முதலமைச்சர் பூபேந்திர படேல் தனது இல்லத்தில் நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-
"குஜராத் மாநிலத்தில் நிதி மேலாண்மை மிகச் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமூகத்தில் தேவையானவர்களுக்கு மட்டுமே நாங்கள் இலவசங்களை வழங்கி வருவதனால், நிதி பற்றாக்குறை என்பது எங்களுக்கு கிடையாது.

பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபோது மேற்கொண்ட நடவடிக்கையினால் தான் குஜராத் மாநிலம் ஒரு மின்மிகை மாநிலமாக திகழ்கிறது. இந்த இலக்கை நாங்கள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டால் அடைந்துள்ளோம்.
குஜராத் மாநிலம் வளர்ச்சி அடைந்த மாநிலமாக இருந்தாலும் கூட, மற்ற மாநிலங்களும் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். அதுமட்டுமல்லாமல், மத்திய அரசு கொண்டுவர உள்ள 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்றத் திட்டம் அனைத்து மாநிலங்களுக்கும் பயன் அளிக்கக்கூடியதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், வருகிற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் நான் பிரசாரம் செய்வேனா? என்று பலரும் கேட்கிறார்கள். எனக்கு தமிழ் பேச தெரியாததால் தேர்தல் பிரசாரத்துக்கு வர முடியாது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Gujarat Chief Minister Bhupendra Patel press meet to tamilnadu journalists