குஜராத் கொடூர விபத்து: 18 பேர் மீது பாய்ந்த வழக்கு! - Seithipunal
Seithipunal


குஜராத்தில் ஏற்பட்ட படகு விபத்து தொடர்பாக 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குஜராத், வதோதரா புகர் பகுதியில் உள்ள ஹர்ணி ஏரிக்கு நேற்று 4 தலைமை ஆசிரியர்கள் உட்பட 24 பள்ளி மாணவர்கள் சுற்றுலா சென்றனர். 

4 ஆசிரியர்கள் உள்பட 24 மாணவர்களும் ஒரே படகில் ஏரியில் பயணித்து பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது படகு எதிர்பாராத விதமாக ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இதில், படகில் இருந்தவர்கள் அனைவரும் ஏரியில் விழுந்து தத்தளித்தனர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக ஏரியில் குதித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்க்கும் பணியில் ஈடுபட்டனர். 

இந்த விபத்தில் 2டு ஆசிரியர்கள் உள்பட 14 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் ஒரு மாணவர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டதாகவும் படகில் 24 மாணவர்கள் இருந்ததால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக குஜராத் போலீசார் 18 பேர் மீது வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gujarat boat accident Case registered against 18 people


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->