#BREAKING | சென்னை வழியாக குஜராத் வந்த 4 தீவிரவாதிகள் கைது! வெளியான பரபரப்பு தகவல்! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில் இலங்கையைச் சேர்ந்த 4 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கைது செய்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று (மே 20) அகமதாபாத் விமான நிலையத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஐபிஎல் போட்டிகளுக்காக கிரிக்கெட் அணி வீரர்கள் அகமதாபாத் விமான நிலையத்தை அடைய உள்ள நிலையில். அகமதாபாத் விமான நிலையத்தில் ஹை அலர்ட் போன்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இவர்கள் ஐபிஎல் ஆட்டங்களுக்கு ஏதேனும் இடையூறு ஏற்படுத்த வந்துள்ளார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

தற்போது இந்த தீவிரவாதிகளை அடையாளம் தெரியாத இடத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொள்ள போலீசார் மற்றும் பாதுகாப்பது படையினர் முடிவு செய்துள்ளனர்.

மேலும், இவர்களிடம் பயங்கரவாதிகளுடனான அனைத்து தொடர்புகளும் விசாரிக்கப்பட்டு வருகின்றன. தீவிரவாதிகள் ஸ்லீப்பர் செல்களா எனவும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த பயங்கரவாதிகள் இலங்கையில் இருந்து சென்னை வழியாக அகமதாபாத் வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. எந்த நோக்கத்துடன் பயங்கரவாதிகள் வந்துள்ளார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இருப்பினும், விசாரணையில் சந்தேகத்திற்கிடமான பொருள் எதுவும் கிடைக்கவில்லை, இருப்பினும் குஜராத் காவல்துறை உஷார் படுத்தப்பட்டுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gujarat Ahmedabad Airport


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->