நீங்கள் செய்த பாவங்கள் அனைத்திற்கும் Payback Time வந்துவிட்டது! அதிமுக வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!
admk condemn to dmk karur senthilbalaji
அதிமுக விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தேர்தல் என்பது மக்களை சந்தித்து, அவர்களிடம் உரையாடி, குறைகளை கேட்டறிந்து, வாக்குறுதி அளித்து, வாக்கு கேட்கின்ற களம்.
ஆனால், இந்த ஜனநாயக முறையையே சீர்குலைத்து, மக்களை அடைத்து வைக்க கரூரில் பட்டிகளை கட்டி வந்துள்ளது திமுக.
இத்தகைய மனிதப் பட்டி ஒன்றில் தீ விபத்து ஏற்படும் சூழல் உண்டானதாக கூட செய்திகள் வந்துள்ளன.
எந்தவித அனுமதியும் இல்லாத, அதிகாரப்பூர்வமாக யாருமே பொறுப்பு ஏற்காத இந்த சட்டவிரோத மனிதப் பட்டிகளில் ஒருவேளை ஏதேனும் விபத்து ஏற்பட்டால், மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், யார் பதில் சொல்வது?
இதுகுறித்து தொடர்ந்து அஇஅதிமுக சார்பில் பல்வேறு புகார்களை ஆதாரத்தோடு அளித்தும், தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது வருத்தமளிக்கிறது.
ஏற்கனவே கரூரில் பல உயிர்கள் பறிபோன சோகம் இன்னும் மறையாத வடுவாக உள்ள நிலையில், இந்த சட்டவிரோத மனிதப் பட்டிகளுக்கு தேர்தல் ஆணையம், அதிகாரிகள் பொறுப்பேற்பார்களா? அல்லது, செந்தில் பாலாஜி பொறுப்பேற்பாரா ?
இந்த மனித பட்டியை நீர்மோர் பந்தல் என்றெல்லாம் உருட்டுவது திமுக-வின் அப்பட்டமான தோல்வி பயத்தின் வெளிப்பாடு.
தில் இருந்தால், தெம்பு இருந்தால், நேருக்கு நேராக நின்று களத்தில் சந்திக்க பாருங்கள் செந்தில்பாலாஜி!
நீங்கள் செய்த பாவங்கள் அனைத்திற்கும் Payback Time வந்துவிட்டது!
மக்களை பட்டியில் அடைக்கும் நீங்கள் படுதோல்வி அடைந்து, மக்களோடே என்றும் இருக்கும் அஇஅதிமுக வெற்றி வேட்பாளர் , முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் அவர்கள் வெல்லப்போவது உறுதி" என தெரிவித்துள்ளது.
English Summary
admk condemn to dmk karur senthilbalaji