திமுகவுக்கு சவால்! ‘எதிர்ப்பு ஓட்டும் எங்களுக்கே வரும்’....! - கூட்டணியை வலுப்படுத்தும் எடப்பாடி பழனிசாமி - Seithipunal
Seithipunal


கூட்டணி அரசியலில் “யார் பெரியவர்?” என்ற அளவுகோல் இல்லை; எல்லோரும் சமம் என்ற தத்துவத்தையே நாம் பின்பற்றுகிறோம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக தெரிவித்தார்.

மேலும், கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதி பட்டியல் வெளியானதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,பெரம்பூரில் விஜய் போட்டி குறித்து எழுந்த கேள்விக்கு பதிலளிக்கையில், “கூட்டணி அமைந்துவிட்ட பிறகு மேல்தாழ்வு என்ற பேச்சே இல்லை.

ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனி பலம் உள்ளது. அந்த சக்திகள் ஒன்றிணைந்தால்தான் வெற்றி சாத்தியம். சிறு துளிகள் சேர்ந்து பெரு வெள்ளமாகும் போல, 234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி கொடியை நாட்டும்” என்றார்.

மேலும், கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு முழு சுதந்திரம் வழங்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், “ஜான் பாண்டியன், பூவை ஜெகன்மூர்த்தி போன்ற தலைவர்கள் தாங்கள் விரும்பும் சின்னத்தில் போட்டியிடலாம்.

எங்களிடம் எந்த கட்டுப்பாடும் இல்லை; திமுக போன்று கட்டாயங்கள் விதிப்பது எங்கள் நடைமுறை அல்ல. ஜனநாயகத்தைக் காக்கும் கூட்டணிதான் இது” என்று வலியுறுத்தினார்.

அரசுக்கு எதிரான வாக்குகள் வேறு கட்சிகளுக்கு செல்லுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “அதிமுகதான் பிரதான அரசியல் சக்தி. எங்கள் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் வாக்கு வங்கியைக் கொண்டவை.

நாம் ஒருங்கிணைந்து செயல்படுவதால், எதிர்ப்பு வாக்குகள் அனைத்தும் எங்களிடம் திரளும். திமுக ஆட்சியை மாற்ற வேண்டும் என்ற மனநிலை மக்களிடம் உருவாகியுள்ளது. மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் எங்களுக்கே அந்த ஆதரவு கிடைக்கும்; அமைதியாக இருப்பவர்களுக்கு அல்ல” எனத் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Challenge DMK Opposition come us Edappadi Palaniswami strengthens alliance


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!


செய்திகள்



Seithipunal
--> -->