இன்று முதல் அரசு சார்பில் ஆன்லைன் கால் டாக்ஸி அறிமுகம்.. மாநில அரசு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


கேரளாவில் அரசு சார்பில் ஆன்லைன் டாக்சி சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

தனியார் ஆன்லைன் வாடகை கார் சேவையைப் போல, கேரளாவில் அரசு சார்பில் ஆன்லைன் டாக்சி சேவை தொடங்கப்படுகிறது. இது குறித்து கேரள மாநில கல்வி மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர் சிவன் குட்டி, செய்தியாளர்களிடம் பேசும் போது, "நாட்டில் ஒரு மாநில அரசே ஆன்லைன் டாக்சி சேவையை தொடங்குவது இதுவே முதல்முறையாகும்.

இந்த சேவையை அரசு துறை நடத்துவது ஒருவேளை உலக அளவிலும் முதல் நிகழ்வாக இருக்கலாம். முழுமையான பாதுகாப்பான மற்றும் சர்ச்சை இல்லாத பயணம் என்பது கேரளா சவாரியின் வாக்குறுதியாகும். தற்போது பல சவால்களை எதிர்கொண்டுள்ள ஆட்டோ டாக்சி தொழிலாளர் துறைக்கு இந்த தனித்துவமான சேவை ஒரு உதவிகரமாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

கேரள அரசின் இந்த முன்னோடி திட்டமான இ-டாக்சி சேவை, மலையாள மாதமான சிங்கம் மாதத்தின் தொடக்க நாளான நேற்று முதல் (ஆகஸ்ட் 17-ம் தேதி) முதல் அமலுக்கு வந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Govt online call taxi from today


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->