அரசு அலுவலகங்களில் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை..அரசு அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் நடைபெற்ற மணிப்பூர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதனைத்தொடர்ந்து மணிப்பூர் மாநில முதலமைச்சராக பிரேன் சிங் பொறுப்பேற்ற நிலையில் முதல் அமைச்சரவை கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்தது.

இந்த நிலையில் அரசு அலுவலகங்கள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும் என்றும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாட்கள் விடுமுறை என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மணிப்பூர் முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

'அரசு அலுவலகங்கள் 5 நாட்கள் மட்டுமே செயல்படும் என்ற அறிவிப்பால் அரசு ஊழியர்களின் பணி மற்றும் உற்பத்தித் திறன் மேம்படும். 2 நாள் விடுமுறையில் அவர்கள் தங்களை புதுப்பித்துக் கொள்ளவும் உதவும். அலுவலகம் காலை 9 மணிக்கு ஆரம்பமாகும். வீட்டு நிர்வாகம் மற்றும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் காலை 8 மணிக்கு தொடங்கும். மதிய நேரங்களில் பள்ளி மாணவர்கள் வீடுகளில் பாடத்தை நல்ல நேரம் கிடைக்கும்' என்று கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Govt office only 5 days working day


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->