அரசு ஊழியர்கள் அதிரடி நடவடிக்கை! கர்நாடகாவில் ஆகஸ்ட் 5 முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம்...! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் 4 அரசு பேருந்து போக்குவரத்து கழகங்கள் உள்ளன. அதில் முக்கியமாக பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் , கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் உள்பட 4 போக்குவரத்து கழகங்கள் உள்ளன. மேலும், மாநிலம் முழுவதும் 25000 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இதில் சுமார் 1½ லட்சம் ஓட்டுனர்கள், நடத்துனர்கள், ஊழியர்கள், பயணசீட்டு பரிசோதகர்கள், அதிகாரிகள் வேலை பார்த்து வருகிறார்கள்.இந்நிலையில் அரசு பேருந்து ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படாமல் உள்ளது.

இதையடுத்து, சம்பள உயர்வு உள்ளிட்ட பிற கோரிக்கைகளை நிறைவேற்றும்படி அரசுக்கு, போக்குவரத்து கழக ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். ஆனால் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வரவில்லை.

இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் அடுத்த மாதம்(ஆகஸ்டு) 5-ந் தேதி காலை 6 மணியிலிருந்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக முடிவு எடுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Government employees take action Indefinite strike in Karnataka from August 5th


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->