வீரர்களே தயாராக இருங்கள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் விடுத்த கோரிக்கை! ஜம்முவில் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் ராணுவம் மற்றும் தீவிரவாதத் தாக்குதல்களை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கும்படி ராணுவ வீரர்களிடம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வலியுறுத்தியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் பாதுகாப்பு நிலவரத்தை ஆய்வு செய்ய இரண்டு நாள் பயணமாக சென்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ராணுவ உயர் அதிகாரிகள், ஜம்மு காஷ்மீர்  அரசு அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். பின் அங்கு நிலவும் சட்டம்ஒழுங்கு நிலவரத்தையும் அவர் ஆய்வு செய்தார். 

இதையடுத்து, காஷ்மீரில் வசித்து வரும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய ராணுவ, அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட அவர். மேலும் ஜம்மு காவல்துறையும், இந்திய துணை ராணுவப் படையினரும் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரை தீவிரப்படுத்தி அங்கு பதுங்கியுள்ள தீவிரவாதிகளை தேடிப்பிடித்து வேட்டையாடும் படியும் அஜித் தோவல் உத்தரவிட்டார்.

அங்கு எந்த தீவிரவாத அச்சுறுத்தல் இல்லாமல் பொதுமக்கள் தங்களது இயல்பான வாழ்க்கையை அச்சமின்றி வாழ்வதை உறுதி செய்யுமாறு  துணை ராணுவப் படையினருக்கு அவர் ஆலோசனைகள் வழங்கினார். 370 சட்ட பிரிவு றது செய்யப்பட்டதுக்கு பின் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 60 தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி உள்ளனர். தீவிரவாதிகள் குறித்து முழு எச்சரிக்கையுடன்  இருக்குமாறுஅஜித் தோவல் இந்திய ராணுவப்படைகளுக்கு கோரிக்கை விடுத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

government alert indian army in kashmir


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal