நற்செய்தி! மாணவர்களின் தற்கொலை நோக்கத்தை தடுக்க 15 வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட சுப்ரீம் கோர்ட்!
Good news Supreme Court has issued 15 guidelines to prevent suicidal thoughts among students
மாணவர்களின் தற்கொலை இந்தியா முழுவதும் கல்வி நிறுவனங்களில் அதிகரித்து வருகிறது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மாணவர்களின் தற்கொலையை தடுக்கும் நோக்கில் 15 வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மேலும், 100-க்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்ட கல்வி நிலையங்கள் மனநல ஆலோசகரை நியமிக்க வேண்டும், கல்வி நிலைய வளாகங்கள், விடுதிகள், இணையத்தில் தற்கொலை தடுப்பு உதவி எண்களை காட்சிப்படுத்தி விளம்பரம் செய்ய வேண்டும், மாணவர்களின் திறமைகளுக்கு ஏற்ப பிரிப்பது, அவமதிப்பதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி,கல்வி மன அழுத்தம், தேர்வு அழுத்தம் மற்றும் நிறுவன ஆதரவு இல்லாததால் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றும், இது ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Good news Supreme Court has issued 15 guidelines to prevent suicidal thoughts among students