நாட்டிலேயே 100% தடுப்பூசி செலுத்தி சாதனை..எந்த மாநிலம் தெரியுமா.? - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் கோவா மாநிலத்தில் 100 சதவீத இலக்கை அடைந்து உள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில், ஒரு பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இதில், இந்தியாவில் கொரோனாவை கட்டுபடுத்த கோவாக்சின் மற்றும் கோவிட்ஷீல்டு உள்ளிட்ட 5 க்கும் மேற்பட்ட தடுப்பூசி களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது .இந்தியாவில் தடுப்பூசி திட்டம் தொடங்கிய ஒரு ஆண்டுக்குள் 100 கோடி டோஸ் தடுப்பூசி என்ற இலக்கை இந்தியா தாண்டியது.

இந்த நிலையில் தற்போது மாநில அளவிலான தடுப்பூசி நிலவரத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்துவதில் 100% இலக்கை கோவா அடைந்துள்ளது. அதாவது, இந்தியாவிலேயே 100% இலக்கை அடைந்த முதல் மாநிலம் என்ற சாதனையை கோவா படைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Goa in 100% covid vaccination


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->