இருபதாம் நூற்றாண்டின் இந்திய அறிவியலாளர்களின் முக்கியமான நபர்.. யார் இவர்? - Seithipunal
Seithipunal


ஜி.என்.ராமச்சந்திரன்:

இருபதாம் நூற்றாண்டின் இந்திய அறிவியலாளர்களுள் முக்கியமானவரும், இயற்பியல் விஞ்ஞானியுமான ஜி.என்.ராமச்சந்திரன் 1922ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பிறந்தார்.

1952ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறை தலைவராக நியமிக்கப்பட்டார். இயற்பியல் துறையின் கீழ் கிரிஸ்டலோகிராஃபி மற்றும் பயோபிசிக்ஸ் என்ற புதிய துறையை நவீன ஆய்வு வசதிகளுடன் சர்வதேசத் தரத்துடன் உருவாக்கினார். இது நாட்டின் தலைசிறந்த ஆய்வுநிலையங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

மூலக்கூறு உயிரி இயற்பியலில் புரதங்களின் கட்டமைப்பு பற்றிய தசைநார் புரதத்தின் மும்மடங்கு எழுச்சுருள் வடிவம் (Triple-helical model for structure of collagen ) என்ற இவரது கண்டுபிடிப்பு புரதக்கூறுகளின் வடிவமைப்பின் அடிப்படைகளை அறிந்துகொள்ள உதவியது.

இந்திய இயற்பியல் துறையின் சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது, லண்டன் ராயல் சொசைட்டியின் ஃபெலோ ஆஃப் விருது, கிரிஸ்டலோகிராஃபி துறையில் இவர் ஆற்றிய பணிக்காக இவால்டு (Ewald) விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார். அனைவராலும் விரும்பப்படும் மரியாதைக்குரிய விஞ்ஞானியாகத் திகழ்ந்த ஜி.என்.ராமச்சந்திரன் 2001ஆம் ஆண்டு மறைந்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

GN ramachandran birthday


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->