ரூ.500 கொடுத்தால் ரூ.10 நோட்டுகள்! ‘ஹைப்ரிட் ஏடிஎம்’ திட்டம் ரெடி! - மத்திய அரசின் அதிரடி முயற்சி
Give 500 and get 10 notes Hybrid ATM scheme ready bold initiative by central government
பொதுமக்கள் தினசரி பரிவர்த்தனைகளில் எதிர்கொள்ளும் சில்லறைத் தட்டுப்பாடு பிரச்சனைக்கு முடிவு கட்டும் வகையில், மத்திய அரசு புதிய அதிரடி திட்டத்தை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, ரூ.10, ரூ.20, ரூ.50 போன்ற குறைந்த மதிப்புள்ள நோட்டுகளை எளிதாக பெறும் வசதியுடன் கூடிய புதிய ஏடிஎம் இயந்திரங்களை நிறுவும் திட்டம் தயாராகி வருகிறது.

மேலும், ரூ.100 மற்றும் ரூ.500 நோட்டுகளை செலுத்தி, அதற்குப் பதிலாக சிறிய மதிப்புள்ள நோட்டுகளை பெற்றுக்கொள்ளும் வசதி கொண்ட ‘ஹைப்ரிட் ஏடிஎம்’ முறையை அறிமுகப்படுத்தவும் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இது நடைமுறைக்கு வந்தால், சில்லறைக்காக கடைகள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள் ஆகிய இடங்களில் மக்கள் அலைமோதும் நிலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் இந்த ஏடிஎம் இயந்திரங்களை அமைக்க அரசு முன்னுரிமை அளிக்கும் எனவும், குறிப்பாக மும்பையில் சில்லறை பரிவர்த்தனை அதிகம் நடைபெறும் சில பகுதிகளில், சோதனை அடிப்படையில் இந்தத் திட்டம் முதற்கட்டமாக அமல்படுத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த முயற்சியின் சாதக, பாதகங்களை மதிப்பீடு செய்த பின்னர், நாடு முழுவதும் விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
English Summary
Give 500 and get 10 notes Hybrid ATM scheme ready bold initiative by central government