ரூ.20 லட்சம், சொகுசு கார் கேட்டு வம்பு...! - மணப்பெண் துணிச்சலுடன் திருமணம் ரத்து...! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலம் பரேலி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஜோதி. இவருக்கும், தொழில் அதிபராக அறியப்படும் ரிஷப் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. நிச்சயதார்த்த நிகழ்ச்சியின்போதே, மணமகள் குடும்பத்தினர் வரதட்சணையாக தங்க நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கத்தை வழங்கியிருந்தனர்.

இந்த நிலையில், ஜோதி – ரிஷப் திருமணம் நேற்று முன்தினம் நடைபெற இருந்தது. திருமண மண்டபத்தில் ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்துகொண்டிருந்த வேளையில், மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் திடீரென கூடுதல் வரதட்சணை கோரி அதிர்ச்சி அளித்தனர்.

ரூ.20 லட்சம் ரொக்கம் மற்றும் ஒரு சொகுசு காரை வழங்கினால் மட்டுமே திருமணம் நடைபெறும் என அவர்கள் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. கூடுதல் வரதட்சணை வழங்காவிட்டால் திருமணத்தை ரத்து செய்வோம் என மிரட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் மனமுடைந்த ஜோதி, இவ்வாறான அவமதிப்பையும் மிரட்டலையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்து, ரிஷப்பை திருமணம் செய்ய மறுத்தார்.

தனது குடும்பத்தை அவமதிக்கும் வகையிலும், வரதட்சணை கேட்டு அழுத்தம் கொடுக்கும் வகையிலும் நடந்துகொண்டதாகக் கூறி, திருமணத்திற்கு சில மணிநேரங்கள் மட்டுமே இருந்த நிலையில் அவர் தைரியமான முடிவை எடுத்தார்.

மணமகள் எடுத்த இந்த துணிச்சலான தீர்மானம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

fuss over luxury car worth 20 lakh bride bravely cancel wedding


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->