20 பள்ளிகளுக்கு நடுவே 3 டாஸ்மாக் கடைகள்! இருண்ட மாடலில் பள்ளிக்கூடம் வரை பாய்ந்தோடும் சாராயம் - பாஜக கண்டனம்!
Tamilnadu BJP Condemn to DMK Mk Stalin govt TASMAC
தமிழக பாஜக விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "திக்கெட்டும் "நாடு போற்றும் நல்லாட்சி" எனத் திமுக அரசு விளம்பரம் வெளியிட்டு வரும் வேளையில், திருநெல்வேலியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகள் 6 ஆறு பேர் வகுப்பறையிலேயே உட்கார்ந்து மது அருந்தும் கொடூரக் காட்சிகள் வெளியாகியுள்ளன.
சம்பந்தப்பட்டுள்ள பள்ளி அமைந்திருக்கும் முருகன்குறிச்சி சுற்றுவட்டாரத்தில் கிட்டத்தட்ட 20 பள்ளிகள் இருக்கும் நிலையில், பள்ளிகளுக்கு மத்தியிலேயே 3 டாஸ்மாக் கடைகள் இருப்பது வெட்கக்கேடானது. பாட்டிலுக்குப் பத்து ரூபாய் அதிகம் விற்று கல்லா கட்டிய
@arivalayam
அரசு, தற்போது வகுப்பறை வரை சாராய வெள்ளத்தைப் பாயவிட்டு பிஞ்சுப் பிள்ளைகளின் படிப்பைச் சீரழித்துவிட்டு, "பள்ளிக் கல்வித்துறையின் பொற்காலம்" என்று வெட்கமே இல்லாமல் வெற்றுப் பெருமைத் தம்பட்டம் அடித்து வருகிறது.
குரங்குக் கையில் பூமாலையைக் கொடுத்ததைப் போல, கல்வியில் சிறந்த தமிழ்நாட்டை, போதையில் சீரழிந்து வரும் தமிழ்நாடாக மாற்றியது தான் திமுக அரசின் நான்கரை ஆண்டுகால சாதனை. வகிக்கும் பதவியின் பொறுப்பை உணராவிட்டாலும் கூட பரவாயில்லை, "அப்பா" என்னும் பட்டத்திற்கு ஆசைப்பட்ட ஒரே காரணத்திற்காகவாவது, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பதவியை அன்பில் மகேஷ் இடமிருந்து பறிக்க வேண்டும்!
அப்பொழுது தான் எஞ்சியிருக்கும் நான்கு மாதங்களிலாவது தமிழக மாணவர்களின் எதிர்காலம் காப்பாற்றப்படும்" என்று தெரிவித்துள்ளது.
English Summary
Tamilnadu BJP Condemn to DMK Mk Stalin govt TASMAC