இலவச வாக்குறுதிகளை தடை விதிக்க முடியாது.. இந்திய தேர்தல் ஆணையம்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படும் போது மாநில கட்சிகள் பல தேர்தலுக்காக பல்வேறு இலவச பொருட்கள் மற்றும் திட்டங்களை அறிவிப்பது வழக்கமாகியுள்ளது. சமீபத்தில் பிரதமர் மோடியுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இது போன்ற இலவச அறிவிப்புகள் இந்திய பொருளாதாரத்தை பாதிப்பதாக நிபுணர்கள் தெரிவித்ததாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் தலைமை தேர்தல் ஆணையம் இலவசங்கள் வழங்குவது கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையில் விளக்கமளித்துள்ளார் இந்திய தேர்தல் ஆணையம் "தேர்தலுக்கு முன்பும் பின்னரும் இலவச திட்டங்களை அறிவிப்பது அரசியல் கட்சிகளின் கொள்கை முடிவு. இலவசங்களை ஒழுங்கு படுத்தும் அதிகாரம் எங்களுக்கு இல்லை" என பதில் அளித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Free promises cannot be banned Election Commission of India


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->