மத்திய தகவல் ஆணையத்தின் (CIC) தலைமை ஆணையராக முன்னாள் சட்டச் செயலாளர் தேர்வு..!
Former Law Secretary selected as the Chief Commissioner of the Central Information Commission
மத்திய தகவல் ஆணையத்தின் (சிஐசி) அடுத்த தலைமை தகவல் கமிஷனராக, முன்னாள் சட்டச் செயலாளரான ராஜ் குமார் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட உயர்மட்ட தேர்வுக் குழுவின் கூட்டத்தில் ராஜ் குமார் கோயல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான உத்தரவு டிசம்பர் 15 ஆம் வழங்கப்பட்டுள்ளது.
ஈதனையடுத்து, ஜனாதிபதி திரவுபதி முர்மு முன்னிலையில் ராஜ் குமார் கோயல் பதவியேற்பு உறுதிமொழி ஏற்க உள்ளார். இவருடன், மேலும் 08 தகவல் கமிஷனர்கள் நியமிக்கப்பட வுள்ளனர், இதற்கு முன்னதாக தலைமை தகவல் ஆணையராக பணியாற்றிய ஹீராலால் சமாரியா கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி அன்று ஓய்வு பெற்றார். இதனையடுத்து புதிய தலைமை தகவல் கமிஷனராக ராஜ்குமார் கோயல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ராஜ்குமார் கோயல்
1990-ஆம் ஆண்டு அருணாச்சல பிரதேசம் -கோவா-மிசோரம்- யூனியன் பிரதேசங்கள்) பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.
அத்துடன், உள்துறை அமைச்சகத்தின் எல்லை மேலாண்மைத் துறையின் செயலாளர் ஆக பொறுப்பு வகித்துள்ளார். மேலும், கடந்த மே 2024 இல், சட்ட அமைச்சகத்தின் நீதித் துறை செயலாளராகவும் இவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. மத்திய அரசு மற்றும் முன்னாள் ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டிலும் பல முக்கிய நிர்வாகப் பதவிகளை வகித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
English Summary
Former Law Secretary selected as the Chief Commissioner of the Central Information Commission