தோட்டத்திலிருந்து கொய்யா பறித்த 04 வயது சிறுமி; கைகால்களை கட்டிவைத்து முன்னாள் ராணுவ வீரர் செய்த கொடூரம்..! - Seithipunal
Seithipunal


இமாச்சல பிரதேச மாநிலம் உனா மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஒருவர், தனது வீட்டு தோட்டத்தில் இருந்து கொய்யா பழங்களை பறித்த 04 வயது சிறுமியை, கட்டி வைத்து தாக்கிய சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சோஷியல் மீடியாக்களில் வைரலாகியுள்ள நிலையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புலம்பெயர் தொழிலாளி ஒருவரின் மகளான குறித்த சிறுமி, படிக்கட்டுகளில் கட்டி வைக்கப்பட்ட நிலையில் உதவி கோரிவது போல கெஞ்சும் காட்சி நெஞ்சை பதத்தைக்க வைக்கிறது. குறிப்பிட்ட அந்த வீட்டின் உரிமையாளரான முன்னாள் ராணுவ வீரரான தனது தோட்டத்தில் கொய்யாப்பழங்களை பறித்த அந்த சிறுமியை பிடித்து வீட்டிற்குள் இழுத்து வந்து, அச்சிறுமியின் கைகளையும் கால்களையும் சங்கிலிகொண்டு கட்டி வைத்ததோடு, அந்த சிறுமியை தாக்கவும் செய்துள்ளார். இந்த கொடூரம் குறித்து அறிந்த சில கிராமவாசிகள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையை மீட்டு சென்றுள்ளனர்.

மீட்பு நடவடிக்கையின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோ சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்யப்பட்டது.அதில், அந்த சிறுமி உதவிக்காகக் கதறி அழுவதும், "என்னைக் காப்பாற்றுங்கள்" என்று மீண்டும் மீண்டும் கதறி கெஞ்சுவதும் பதிவாகி உள்ளது.

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து சிறுமியை கட்டி வைத்து தாக்கிய அந்த முன்னாள் ராணுவ வீரர் பாதிக்கப்பட்ட சிறுமி குடும்பத்தினரிடம் தனது தவறை ஒப்புக்கொண்டு, பகிரங்க மன்னிப்பு கோரி உள்ளார். 

அத்துடன், கிராம மக்கள் மற்றும் அதிகாரிகள் என கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாக, குற்றம் சாட்டப்பட்டவர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் "நான் தவறு செய்துவிட்டேன்; அந்தச் சிறுமியிடமும், அவளது குடும்பத்தினரிடமும், அனைவரிடமும் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இது போல மீண்டும் நடக்காது," என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், உள்ளூர் காவல் அதிகாரிகள் BNS மற்றும் 'சிறுவர் நீதிச் சட்டம்' ஆகியவற்றின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் அந்த முன்னாள் ராணுவ வீரர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியான பின்னரும், 112 என்ற அவசர உதவி எண் மூலம் புகார் பெறப்பட்ட பின்னரும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாவட்ட காவல்துறை தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Former Army Soldier Attacks 4 Year Old Girl Tying Her Hands and Feet for Picking Guavas from His Garden


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!


செய்திகள்



Seithipunal
--> -->