அரசியலில் இருந்து ஒய்வு பெரும் முக்கிய புள்ளி - அதிர்ச்சியில் பாஜகவினர்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம் பெங்களூரு வடக்கு மக்களவைத் தொகுதியின் எம்.பி.யாக இருக்கும் சதானந்த கவுடா, இனி வரும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு பி.எஸ்.எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்தபோது சதானந்த கவுடா கர்நாடக முதல்வராக பதவி ஏற்றார். இதைத் தொடர்ந்து அவர் கடந்த 2014ம் ஆண்டில் சிறிது காலம் மத்திய ரயில்வே அமைச்சராக பதவி வகித்தார். அதன் பின்னர் அவர் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராகவும், பின்னர் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறைக்கான மத்திய அமைச்சராகவும் பணியாற்றினார்.

இந்த நிலையில், வருகிற 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் பின்னணியில் பாஜக மற்றும் ஜேடி(எஸ்) கூட்டணி அமைந்துள்ள நிலையில், கூட்டணி அமைப்பது குறித்து கர்நாடக பாஜக தலைவர்கள் எவருடனும் தலைமை விவாதிக்கவில்லை என்று கவுடா தெரிவித்தார்.

இதற்கிடையே, வருகிற 2024ம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட கவுடாவுக்கு டிக்கெட் வழங்கப்பட மாட்டாது என்று செய்திகள் வெளியான நிலையில் அவர் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். இதனால் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

formar minister sadananda gowda announce rest from political


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->