கடுமையான வானிலை...! இந்திரா காந்தி விமான நிலையத்தில் விமானங்கள் தாமதம்...! - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியிலுள்ள நாட்டின் மிகப்பெரிய மற்றும் பரபரப்பான விமான நிலையமான, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம்(IGIA). இந்த விமான நிலையத்தில் தினந்தோறும் சுமார் 1,300 விமான இயக்கங்கள் கையாளப்படுகின்றன.

அவ்வகையில்,டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வந்த நிலையில், சில இடங்களில் கனமழையுடன், பலத்த காற்று வீசியது.

இதனால், மோசமான வானிலை காரணமாக டெல்லி விமான நிலையத்தில் சுமார் 200 விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, டெல்லியில் தரையிறங்க வேண்டிய 2 விமானங்கள் ஜெய்ப்பூருக்கும், ஒரு விமானம் 'அகமதாபாத்' விமான நிலையத்திற்கும் திருப்பி விடப்பட்டுள்ளது.

மேலும், வானிலை சீரான பிறகு விமான சேவைகள் வழக்கம்போல் இயங்கும் என ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் விளக்கமளித்துள்ளன.இதனால் பயணிகள் சற்று சிரமத்திற்கு உள்ளாகியுள்ளன 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Flights delayed at Indira Gandhi Airport due to weather


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->