விமானத்தில் 5 மணி நேரமாக போராடிய பயணிகள்: நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


மும்பையில் இருந்து மொரீஷியஸ் சென்ற விமானத்தில் ஏசியில் ஏற்பட்ட பழுதால் பயணிகள் அனைவருக்கும் திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. 

மும்பை விமான நிலையத்தில் இருந்து குழந்தைகள் உள்பட பயணிகளுடன் இன்று அதிகாலை 4:30 மணி அளவில் மொரீஷியஸ்க்கு புறப்பட தயாரானது. 

அப்போது இந்த ஏர் மொரீஷியஸ் எம் கே 749 விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து விமானம் சுமார் 5 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. 

இதனால் காலை மூன்று  3.45 மணிக்கு விமானத்தில் ஏறிய பயணிகள் அனைவரும் 5 மணி நேரமாக விமானத்திலிருந்து வெளியேற அனுமதிக்கப்படவில்லை என தெரிகிறது. 

இதற்கிடையே விமானத்தில் இருந்த ஏசியில் பழுது ஏற்பட்டதால் பயணிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு கடும் அவதி அடைந்தனர். 

மேலும் முறையான அறிவிப்பு எதுவும் இல்லாமல் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டதால் பயணிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

flight delayed 5hrs


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->