குஜராத்தில் பரபரப்பு.. பாஜக - காங்கிரஸ் கட்சிகளிடையே மோதல் - 5 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி இந்துத்துவம் குறித்து பேசியதை கண்டித்து குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தின் முன்பு பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. 

சிறிது நேரத்தில் இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டதால் பலர் படுகாயமடைந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் அதிக அளவிலான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

தற்போது, அங்கு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் காவல்துறையைச் சேர்ந்த 2 பேர் காயமடைந்துள்ளனர் என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோதல் தொடர்பாக ஒரு காவல்துறை அதிகாரி மற்றும் உள்ளூர் பா.ஜ.க. இளைஞரணி சார்பில் அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் போலீசார் 2 முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்துள்ளனர். 

அதன் படி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வைச் சேர்ந்த சுமார் 450-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் மோதலில் ஈடுபட்ட 5 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

five peoples arrest for clash congrass and bjp


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->