பெங்களூர் || நின்ற ரெயிலில் திடீர் தீவிபத்து - பயணிகளின் கதி என்ன?
fire accident at train in banglore
பெங்களூர் || நின்ற ரெயிலில் திடீர் தீவிபத்து - பயணிகளின் கதி என்ன?
பெங்களூரு சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு இன்று காலை 5.45 மணிக்கு வந்த உத்யான் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து பயணிகள் இறங்கிச் சென்றனர்.
இந்த நிலையில் இந்த ரெயிலின் பி1 மற்றும் பி2 பெட்டிகளில் இருந்து காலை 7 மணியளவில் திடீரென அதிக அளவில் புகை வரத் ஆரம்பித்துள்ளது.

இதையறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து புகை வருவதற்கான காரணம் என்ன என்று பார்ப்பதற்குள்ளேயே தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதையடுத்து அதிகாரிகள் சம்பவம் குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் படி அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த விபத்தினால், உத்யான் எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று கொண்டிருந்த 3-வது நடைமேடை மற்றும் அருகில் உள்ள 4-வது நடைமேடையில் எந்த ரெயில்களும் வர அனுமதிக்கப்படவில்லை.

ரெயிலில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கிச் சென்ற பிறகே இந்தத் தீ விபத்து ஏற்பட்டதால் அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அதிகாரிகள் நின்று கொண்டிருந்த ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தத் தீவிபத்தில் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
fire accident at train in banglore