சாலை விதி மீறல்.. அபராதங்களை குறைத்தது அரசு..! வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி.! - Seithipunal
Seithipunal


கடந்த மாதம் அமலுக்கு வந்தது, மோட்டார் வாகன சட்டத் திருத்தம். சாலை விதிகளை மீறுவோர் மீது மோட்டார் வாகன சட்டத்தின்படி பல மடங்கு அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது கேரளா அரசு கட்டண தொகையை குறைத்துள்ளது.

அபராத தொகை மாநில அரசு சேர்வதால் அந்தந்த மாநில அரசுகள் நிர்ணயித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

மோட்டார் வாகன சட்டத்தின்படி அதிவேகமாக கனரக வாகனங்கள் சென்றால் இரண்டாயிரத்தில் இருந்து நான்காயிரம் வசூலிக்கப்படும். இதனை கேரள அரசு 3 ஆயிரமாக நிர்ணயித்துள்ளது. மொபைல் போனுடன் வாகனம் ஓட்டினால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டது.

இதனை 2000 ஆக கேரள அரசு குறைத்துள்ளது. ஹெல்மெட் இல்லாமல், சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதனை 500 ரூபாயாக குறைந்துள்ளது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் 10 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இதில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை. சிறுவர்கள் வாகனங்களை ஓட்டினால் வண்டியின் உரிமையாளர்களுக்கு அபராத தொகை 10 ஆயிரம் ரூபாயாக இருந்தது. இதனை குறைக்க தேவையில்லை என கேரள அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fine decreased to rules violent


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->