இறுதிகட்ட பரிசோதனையில் கொரோனா தடுப்பூசி.. இந்திய நிறுவனம் அசத்தல்.!! - Seithipunal
Seithipunal


ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்ட மனித பரிசோதனைக்கு நாடு முழுவதும் ஐந்து தளங்கள் தயாராக உள்ளது என உயிர் தொழில்நுட்பத் துறை செயலாளர் ரேணு ஸ்வரூப் நேற்று தெரிவித்தார். 

உலகில் மிகப் பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, கொரோனா  தடுப்பூசி தயாரானவுடன் அதை தயாரிக்க ஆக்ஸ்போர்ட் மற்றும் அஸ்ட்ராஜெனெகா ஆகியோரால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

முதல் இரண்டாம் கட்ட சோதனை முடிவுகள் இம்மாத தொடக்கத்தில் வெளியானது. கொரோனா தடுப்பூசியின் மனித மருத்துவ பரிசோதனைகளில் இரண்டு மற்றும் மூன்றாம் கட்டத்தை கட்டங்களை நடத்துவதற்கு புனேவை தளமாக கொண்ட எஸ்.ஐ.ஐ இந்தியா மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரலின் அனுமதி கோரியுள்ளது. 

தடுப்பூசி அனைத்து அனுமதிகளையும் பெற்றவுடன் கணிசமான அளவுகளுடன் தயாராக இருப்பதால் இறுதி ஒப்புதலுக்கு முன்பே தடுப்பூசி உற்பத்தி செய்ய தொடங்குவதாக ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து உயிர் தொழில்நுட்பத் துறை செயலாளர் கூறுகையில், இது ஒரு முக்கியமான கட்டமாகும். ஏனெனில், இந்தியாவிற்கு தடுப்பூசி வழங்குவதற்கு முன்னர் நாட்டுக்குள் அதுகுறித்த தரவுகளை வைத்திருப்பது அவசியம். 

கொரோனா தடுப்பூசிக்கு மூன்றாம் கட்ட மருத்துவ தளங்களை அமைத்து வருகிறோம். நாங்கள் ஏற்கனவே அவற்றில் வேலைகளை செய்ய தொடங்கி விட்டோம். இப்போது ஐந்து தளங்கள், மூன்றாம் கட்ட சோதனைக்கு தயாராக உள்ளது என கூறினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

final corona vaccine test


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->