மர்ம முறையில் உயிரிழந்து கிடந்த விவசாய சங்கத்தலைவர் -அதிகாலையிலேயே பரபரப்பு.!  - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் உள்ள, விஜயநகர் மாவட்டம் ஹோஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜெ. கார்த்திக். விவசாய சங்க நிர்வாகியான இவர் முதலில் கொடிஹள்ளி சந்திரசேகர பனா ரைதா சங்கத்தில் இருந்து செயல்பட்டார். பின்னர் அந்த சங்கத்தில் இருந்து விலகி தனியாக ஒரு சங்கத்தை உருவாக்கினார். இந்த நிலையில், நேற்று புடகும்பா கிராஸ் அருகே நெடுஞ்சாலையில் விவசாய சங்க தலைவர் கார்த்திக்கின் டூவீலர் கிடந்தது. அதற்கு பக்கத்திலேயே கார்த்திக் படுகாயமடைந்த நிலையில் கிடந்தார். 

அப்போது, அந்த வழியாக சென்றவர்கள், சாலையில் கிடந்த கார்த்திக்கை மீட்டு ஹூப்ளியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார்.

இந்தத் தகவலை அறிந்த பசுமைப்படை விவசாய சங்க உறுப்பினர்கள் பல போராட்டங்களை முன்னின்று நடத்திய கார்த்திக்கின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால், காவல் துறை விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். விவசாய சங்க தலைவர் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது விஜயநகர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

farmers union leader karthik died in karnataga


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->