அமெரிக்க வரி விதிப்பு குறித்து விவாதிக்க கூடும் 'பிரிக்ஸ்' அமைப்பின் மாநாடு: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்க்கவுள்ளார்..!
External Affairs Minister Jaishankar to attend BRICS summit to discuss US tariffs
பிரேசில் அதிபர் லுலா டா சில்வா தலைமையில் 'பிரிக்ஸ்' அமைப்பின் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதில், வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் பங்கேற்கவுள்ளார். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால் அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்த்துள்ளார். அத்துடன், தென் அமெரிக்க நாடான பிரேசிலில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கும் 50 சதவீத வரி விதித்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க வரி விதிப்பு குறித்து விவாதிக்க, பிரிக்ஸ் அமைப்பில் இடம் பெற்றுள்ள பிரேசில் அதிபர் லுலா டா சில்வா தலைமையில், நாளை மறுதினம் பிரிக்ஸ் அமைப்பின் மாநாடு, 'வீடியோ கான் பரன்ஸ்' வாயிலாக நடைபெறவுள்ளது. இதில் இந்தியா சார்பாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்கவுள்ளார்.
இந்த கூட்டத்தில், அமெரிக்க வர்த்தக கொள்கை மட்டுமின்றி, வளர்ந்து வரும் சந்தை நாடுகளின் தலைவர்களை ஓரணியில் திரட்டவும் பிரேசில் அதிபர் லுலா டா சில்வா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.அத்துடன், பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன தோடு, இது தவிர, பல உறுப்பினர் நாடுகளும் உள்ளன.
English Summary
External Affairs Minister Jaishankar to attend BRICS summit to discuss US tariffs