#அருணாச்சலப் பிரதேசம்: போட்டியே இல்லாமல் ஜெயித்த பாஜக.! Ex. எம்.எல்.ஏ மனைவிக்கு குவியும் வாழ்த்து.!  - Seithipunal
Seithipunal


மேற்கு வங்கம், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அமைந்துள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைந்துள்ளது. கடந்த பிப்ரவரி 26-ம் தேதி மகாராஷ்டிராவின் கஸ்பாபெத் மற்றும் சின்ச்வாட் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது.

இதனை தொடர்ந்து, பிப்ரவரி 27-ல் ஈரோடு கிழக்கு (தமிழ்நாடு), ராம்கர் (ஜார்கண்ட்), சகர்திகி (மேற்கு வங்கம்) மற்றும் லும்லா (அருணாச்சல பிரதேசம்) ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. இன்று காலை 8 மணி முதல் இந்த இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கைகள் துவங்கியுள்ள.  

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள லும்லா தொகுதிக்கான  இடைத்தேர்தலில் 33 வாக்குச் சாவடிகளில் என மொத்தம் 9,169 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இதில், 4,712 பெண் வாக்காளர்கள் உள்ளனர். இதில் பாஜக டிசெரிங் லாமு பாஜகவால் நிறுத்தப்பட்டார்.

பாஜக சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் செரிங் லாமு முன்னாள் லும்லா எம்.எல்.ஏவான ஜம்பே தாஷியின் மனைவி ஆவார்., இந்த தொகுதியில் செரிங் லாமு போட்டி இன்றி வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகியுள்ளார். அவருக்கு தற்போது அமைச்சர் கிரண் ரிஜிஜு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ex MLA Wife won In Arunachal Pradesh


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->