இந்தியாவிற்கு ஆன்மீக அறிவியல் வேண்டும் - இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்கு ஆன்மீக அறிவியல் வேண்டும் என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ முன்னாள் தலைவரும், விக்ரம் சாராபாய் நிறுவனத்தின் சிறப்பு பேராசிரியருமான டாக்டர் சிவன் தனது மனைவி நேற்று மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு வந்தார். அங்கு வந்த அவர், ஆதீனத்தின் 27-வது குருமகாசன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகளை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். அவருக்கு ஆதீனம் சார்பில் நினைவு பரிசு மற்றும் திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது. 

அதன் பின்னர் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், விண்வெளி துறையில் மட்டுமல்லாது அணுசக்தி துறை, வேளாண்துறை, வேளாண் அறிவியல் துறை, ரசாயன துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது. விரைவில் இந்தியா உலகத்தில் அனைத்து துறைகளிலும் முதன்மையான நாடாக மாறும். 

தற்போது மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 82 சதவீத பொருட்கள் நமது நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. விரைவில் 100 சதவீதம் என்ற இலக்கை எட்டும் என்று கூறியுள்ளார்.

மேலும், மாணவர்கள் எதிர்காலத்தில் வாய்ப்புள்ள துறைகளை தேர்ந்தெடுத்து ஆழ்ந்து படிக்க வேண்டும். அறிவியலும், ஆன்மிகமும் வேறு வேறு துறைகள் என்றாலும் ஆன்மிக அறிவியல் குறித்து மேலும் ஆராய்ச்சிகள் செய்யப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ex ISRO president Sivan speech about devotional science


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->